Monday, September 22, 2008

722. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?


<p><a href="undefined?e">undefined</a></p>

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)

படம்: பார்த்தால் பசி தீரும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: ஸ்ரீ

3 Comments:

Anonymous said...

முழு பாட்டையும் என் 3வது வயதில் மனப்பாடமாய் பாடுவேனாம் அம்மா அடிக்கடி சொல்வார்கள். அழகான பாடல்

ராமலக்ஷ்மி said...

//பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?//

இந்த வரிகள் இந்தப் பாடலுக்கே பொருந்தும். இனிமையான இசையில் அருமையான பாடல்.

Unknown said...

//ஸ்ரீ said...
முழு பாட்டையும் என் 3வது வயதில் மனப்பாடமாய் பாடுவேனாம் அம்மா அடிக்கடி சொல்வார்கள். அழகான பாடல்//

ஆமா ஆமா பாடுவாராம் அம்மா சொல்லிருக்காங்க.. இப்ப பாட சொன்னா தான் மாட்டேன்கிறார்..!! :P

Last 25 songs posted in Thenkinnam