பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள் ஊறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
(பாட வந்ததோ)
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர் காலம்
நெஞ்சில் வெயில் காலம்
அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி
பண் பாடி கண் மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி
(பாட வந்ததோ கானம்)
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
தேனே தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள்
விரைந்தால் கடலும் வழி விடும்
(பாட வந்ததோ கானம்)
படம்: இளமைக் காலங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்:பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல்: வாலி
Tuesday, September 9, 2008
691. பாட வந்ததோ கானம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
பி.சுசீலா-ஏசுதாஸ் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. லலலா என்று இசையரசி தொடங்கும் பொழுது கம்பிப் பாகு போல இழுபடும் குரல் அப்படியே தேன் துளிகளாய் பொழிந்து தித்திக்கும் பொழுது பாடல் நம்மைக் இளமைக் காதலின் உச்சத்திற்கே கொண்டு போய்விடும். இளையராஜாவின் அற்புத இசைமகிமை.
வைரமுத்து
Post a Comment