பூமாலையே தோள் சேரவா
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( ஏங்கும் இரு )
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
நான் உனை நினைக்காத நா…ளில்லையே
தேனினை தீண்டாத பூ… இல்லையே (தனனா)
நான் உனை நினைக்காத நா…ளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
தேனினை தீண்டாத பூ…வில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா
(லலல லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)
காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)
காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா
படம்: பகல் நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி
Wednesday, September 17, 2008
704. பூமாலையே தோள் சேரவா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment