Friday, September 12, 2008

696. அன்பு நடமாடும் கலை கூடமே




அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே
(அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
(அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
(அன்பு)

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
(அன்பு)

படம்: அவந்தான் மனிதன்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

1 Comment:

Welcome to Kathir's World said...

ஒரு படக் கம்பெனியில கண்ணதாசன் ஐயாவை
பாட்டெழுதக் கேட்டாங்க. அவர்
பிஸியா இருந்ததால அப்புறம்
பார்க்கலாம். என்றாராம்.
‘‘மேயில சிங்கப்பூர்ல ஷூட்டிங் நடத்தணும்
கவிஞரே...’’ன்னு அடுத்த வாரம்
வந்து கேட்டாங்க. அப்பவும் பிஸி.

ஏப்ரல் மாசம் முடிய ஒரு வாரம்
இருந்தப்ப, எம்.எஸ்.வி.யோட
வந்தாங்க. அவர் ‘‘கவிஞரே... மேயில
ஷூட்டிங் போகணும்கறாங்க.
பாட்டு...’’ன்னு கேக்கவும், கவிஞர்
கோபமா, ‘‘என்னடா விசு மே...
மேன்னுக்கிட்டு... இந்தா பாட்டு!
அன்பு நடமாடும் கலைக்கூடமே,
ஆசை மழை மேகமே, கண்ணில்
விளையாடும் ‌எழில் வண்ணமே,
கன்னித் தமிழ்
வண்ணமே’ன்னு மே மேயாப்
போட்டு அஞ்சே நிமிஷத்துல
பாட்டு எழுதிக் குடுத்து அசர
வெச்சாராம் அந்த மகத்தான கவிஞர்.

https://www.facebook.com/ramjhi.issaimazhalai/posts/10156683102059874

Last 25 songs posted in Thenkinnam