Tuesday, September 23, 2008

723. அவள் ஒரு நவரச நாடகம்





அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
(அவளொரு)

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
(மரகத மலர்)
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா
(அவளொரு)

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
(அறுசுவை)
ஊடல் அவளது வாடிக்கை
(ஊடல்)
என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா
(அவளொரு)

படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்பவர்கள்: புனிதா, ஸ்ரீமதி

9 Comments:

Anonymous said...

எழுபதுகளில் வெளிவந்த எஸ்.பி.பியின் பாடலை கேட்க வைத்தமைக்கு நன்றி! ஆனால் எம்.ஜி.ஆர் மிஸ் ஆகிட்டாரே?

ஆயில்யன் said...

சூப்பர் பாட்டு!

அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச இந்த இடம்

அஹஹஹா!

அஹஹஹா!

MyFriend said...

@புனிதா:

//ஆனால் எம்.ஜி.ஆர் மிஸ் ஆகிட்டாரே?//

அதுக்குதான் ஐஸ்வர்யா ராய் இருக்காங்களே. ;-)

@ஆயில்யன்:

இந்த பாட்டுல உங்களுக்கு பிடித்த வரி அஹஹஹா மட்டும்தானா? ;-)

Anonymous said...

Kalakkal Paatu MSV Vaaram SuPerB Vaaram. Vaara Kadaisiyil relaxaaha ketka en pathiu onnu kaathuttu irukunga. Athuvarai wait pannungal. Pathivirkku mikka nandri : Covai Ravee

Unknown said...

எனக்காகவே எழுதின பாட்டு மாதிரியே இருக்கு..!! ;)) அடிக்கக்கூடாது ஓகே????? ;))

Unknown said...

அடடா அக்கா நன்றிஸ்..!! :)))))))))நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தையில்ல எனக்கு.. நாந்தான் மயங்குறேன்..!!

MyFriend said...

@ரவி:

உங்க பதிவை draftல பார்த்தேன். கலக்கல். ;-)

@ஸ்ரீமதி:

இதுக்கெல்லாம் யாராவது அடிப்பாங்களா? சில பாடல்கள் கேட்கும்போது இப்படித்தான் ஃபீலிங்ஸ் வரும். தப்பே இல்ல . ;-)

//நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தையில்ல எனக்கு.. //

அட.. இந்த பாடலும் வேணுமா? போட்றலாம். ;-)

Unknown said...

இப்பதான் உங்க ப்ளாக் முழுவதும் பார்த்தேன்.. எல்லாமே எனக்குப் பிடிச்ச பாடல்கள்.. எல்லாத்துலையும் கமெண்ட் போட முடியல.. அதான் இங்கயே சொல்லிட்டேன்..!! :))

ராமலக்ஷ்மி said...

இனியவள் புனிதா said...
//எழுபதுகளில் வெளிவந்த எஸ்.பி.பியின் பாடலை கேட்க வைத்தமைக்கு நன்றி!//

வழிமொழிகிறேன். 'ஆயிரம் நிலவே வா' போல எஸ்.பி.பி-யின் குரலில் இளமை ததும்பும் இப்பாடலிலும்.

Last 25 songs posted in Thenkinnam