Saturday, September 20, 2008

712. சரோஜா - நிமிர்ந்து நில்





நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது
உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதை விடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறு முன்னேறு
(நிமிர்ந்து நில்..)

நேற்றுமில்லை நாளையில்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாற வேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கைகள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரம் இன்று பிறப்பதில்லை
வீரனாக ஆவதுண்டு
கோழை என்று எவனுமில்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு
இப்போதுதான் சோதனை
(நிமிர்ந்து நில்..)

விழுவெதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்புக்காக
அனைத்துமிங்கே நட்புக்காக
ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாதே மோதி பாரு
முயன்று ஏறு முடிவில் உந்தன்
படைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
மாண்டவர் யார் உலகம் சொல்லும்
நீயு முன்னாடியே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும்
உன் முன்னே தடைகள் இல்லை
(நிமிர்ந்து நில்..)

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam