Sunday, September 14, 2008

698. அந்திமழை மேகம் தங்க மழை தூவும்




அந்திமழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் வந்ததெனப் பாடும் பெருநாளாம்
ஓ இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திருநாளாகும்
நாள்தோறும் இந்த ஊர்கோலம்

(அந்திமழை மேகம்)

நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைக்கூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

(அந்திமழை மேகம்)


பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களியாட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோறும் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

(அந்திமழை மேகம்)

படம்: நாயகன்
இசை: இளையராஜா
பாடல்: புலமைப்பித்தன்
பாடியவர்கள்: டி.எல்.மகாராஜன், பி.சுசீலா

***

விரும்பிக் கேட்டவர்: ஜிரா

1 Comment:

G.Ragavan said...

நன்றி நன்றி... கேட்ட பாடலைத் தந்தமைக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச இளையராஜா பாட்டுல இதுவும் ஒன்னு... படம் பாத்தா யாரு பாடுறாங்கன்னே தெரியாது.. ஆனா துள்ளலோ துள்ளல். இசையரசி பிரமாதாப்படுத்தீருப்பாங்க. கூடப் பாடிய டி.எல்.மகராஜனுடைய தந்தைதான் பிரபல பாடகர் திருச்சி லோகநாதன்.

Last 25 songs posted in Thenkinnam