Sunday, September 28, 2008

727. வளையோசை கலகலகலவென

இன்று 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் அவர்களின் 79-வது பிறந்தநாள். இசைக்குயிலுக்கு தேன்கிண்ணம் குழுவினரின் பிறந்தநாள் வாழ்த்துகள்!




வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென)


உன்னைக் காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்

(வளையோசை கலகலகலவென)


படம்: சத்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam