பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சற்றே நான் மலர்ந்தேனடா
பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்று நான் ஜெயித்தேனே நான்
ஜில்லென்று பனி காறு தொட்டதாய் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே
(பார்த்ததும் திகைத்தேனே..)
எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய்
உச்சி வேளை வெயில் போல காதல் மூட்டினாய்
இங்கு அங்கு எங்கும் உந்தன் பிம்பம் பார்க்கிறேன்
தொட்டு பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன்
ஞாபகங்கள் தட்ட மாலை ஆடும்
மாய வலை நம்மை வந்து மூடும்
வார்த்தைகள் போதுமடி வேண்டுமே உந்தன் மடி
நீளுமே ஒற்றை முடி நீ மதுரமடி
(பார்த்ததும் கரைந்தேனடா..)
கேட்கும் போது இலலி என்று ஏங்க வைக்கிறாய்
ஏக்கம் தீர கொஞ்சம் மீற வைக்கிறாய்
என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பெய்யுதே
பார்க்கும் யாதும் இப்போதெல்லாம் அழகானதே
காதலின் வெப்பம் நம்மை தீண்டும்
மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும்
ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை
தூக்கம் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை
(பார்த்ததும் திகைத்தேனே..)
படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சித்ரா
Wednesday, August 19, 2009
யாதுமாகி - பார்த்ததும் கரைந்தேனடா
பதிந்தவர் MyFriend @ 1:09 AM
வகை 2000's, 2009, சித்ரா, விஜய் ஜேசுதாஸ், ஜேம்ஸ் வசந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment