Wednesday, December 24, 2008

860. அச்சம் என்பது மடமையடா!

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா(2)

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா (அச்சம்)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா(2) (அச்சம்)

கனகவிசயரின் முடிதலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன் ஆஆஆஆஆ (கனகவிசயரின்)
இமயவரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே ( அச்சம்)

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆ (கருவினில்)
களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கிறார்.
(அச்சம்)


திரைப்படம் : மன்னாதி மன்னன்
பாடியவர்: டி. எம் .எஸ்
இசையமைத்தவர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

1 Comment:

ஆயில்யன் said...

//வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கிறார்.///


பொருத்தமான வரிகளுக்கு பொருந்திய மனிதர்!

Last 25 songs posted in Thenkinnam