இந்த ஒலித்தொகுப்பை சென்ற வாரமே வழங்கப்படவேண்டியது சில அலுவல் வேலை நிமித்தம் தாமதமாயிடுச்சு. அதனாலென்ன பழங்களை நேரம் காலம் பார்த்தா சுவைக்கின்றோம். இல்லையே அதேபோல் இதோ இந்த ஒலித்தொகுப்பில் ஒரு பாடல் கேள்வியாக தருகிறார் வித்தியாசமான குரலின் சொந்தக்காரர் திரு. கே.எஸ்.நாதன் அவர்கள் அது எந்த பாடல் எந்தெந்த சுவைகளில் கேட்டுத்தான் பாருங்களேன். இந்த பதிவை பதிவதற்குள் நமது இணைய நன்பர்கள் பலபேர் தரவிறக்கம் செய்து கேட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். எப்படிங்க ஒலித்தொகுப்பு நல்லா இருந்துதுங்களா? உங்கள் உணர்வுகள் ஒரு வரியில் எழுதிடுங்களேன்.
|
2 Comments:
மிக அருமை. மெல்லிசை மன்னரின் இசையில் பாடும் நிலா பாலு பாடும் பாடல் தேன் தொட்ட மாம்பழத் துண்டு.
அடுத்து வந்த ராஜ்குமார் பாரதியின் குரல்...எல்.வைத்தியநாதன் இசையில் சுறுசுறுப்பான அதிரசம்.
இசைஞானி இளையராஜாவின் குரலிலும் இசையிலும் மனோவோடு சேர்ந்து தந்தது...தேங்காய்த் துருவிக் கலந்த பச்சரிசிப் பிட்டு.
நன்றி. நன்றி. நன்றி.
ஜி.ஆர் சார் வாங்க வாங்க..
இந்த மாதிரி உற்சாகமூட்டும் பின்னூட்டங்களை தான் உருவாக்கியவர்கள் எதிர்பார்ப்பார்கள். இதுபோல் இன்னும் வித்தியாசமான ஒலித்தொகுப்புகள் வரவிருக்கின்றன. காத்திருப்பு என்றும் வீண்போவதில்லை. மகிழ்ச்சி. நன்றி.
Post a Comment