இந்த மார்கழி மாதத்தில் ஒரு வித்தியாசத்திற்காக ஒரு பக்தி ஒலித்தொகுப்பு கேட்கலாம். இதோ எனது நண்பர் ஒருவர் “கிருஷ்ணார்ப்பனம்” என்ற தலைப்பில் இனிமையான இந்த ஒலித்தொகுப்பு வழங்கியிருக்கிறார். இதில் கிருஷ்ணன் மேல் பாடப்பட்ட சினிமா படத்தில் இருந்தும் ஆல்பங்களில் இருந்தும் தேர்ந்தெடுத்திருப்பது. அவரின் அபார முயற்ச்சிக்கு பாராட்டப் படவேண்டிய ஒன்று. குறந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நமது வேலைகளூக்கு நடுவே அந்த கோபலானனை நம உதடுகள் உச்சரித்தால் அதுவே நமக்கு பேரின்பம். கடவுள் கிருபையால் இந்த பதிவு 850 ஆவது ஆக அமைந்து விட்டது. 1000-வது பதிவு க்ண்முன் நிழலாடுகிறது அந்த அதிர்ஸ்டம் யாருக்கோ?
இது ஒரு நல்ல தரமிக்க ஒலித்தொகுப்பு வழக்கம்போல் நம் அன்புக்குரிய ஆதர்ஸ அறிவிப்பாளர் “டிஜ்ஜிடல் குரலோன்” திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்களின் குரலில் அமைதியுடன் கேட்டு மகிழுங்கள். அப்படியே உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உடன் ஆக்கத்தை உருவாக்கியவருக்கு ஒரு நல்வாழ்த்து சொல்லிடுங்க.
ஆக்கத்தை உருவாக்கியவர்:
திரு. செந்தமிழ் நேசன்
சிங்காநல்லூர்
கோவை
|
1. கண்ணன் பிறந்தான் எங்கள்
2. கோகுலத்தில் ஒரு நாள் ராதை
3. தேவி ஸ்ரீ தேவி
4. ஆயர் பாடி மாளீகையில்
5. குருவாயுருக்கு வாருங்கள்
6. கீதை சொன்ன கண்ணன்
7. கண்ணனை நினைக்காத
8. கண்ணன் நினைத்தால்
9. காவிரிக்கரையில் கண்ணன்
0 Comments:
Post a Comment