ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல >> சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா >> முருகா என்றதும் உருகாதா மனம் >> மனம் கனிவாக அந்த கன்னியை >> கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் >> காதல் ஜோதி அணையாதது கண்கண்ட >> கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே >> எங்கே நீயோ அங்கே >> அங்கே மாலை மயக்கம் யாருக்காக >> யாருக்காக இது யாருக்காக.
என்னன்னு புரியவில்லைதானே? “சீர் அந்தாதி, ஒரு கொடியில் பன்னிரு மலர்கள்” போன்ற முன்னமே வந்த பதிவுகளை கேட்டிருப்பீர்களே அது போன்று தான் இந்த தொடர் அந்தாதி ஒலித்தொகுப்பும். வித்தியாசமான பாடல் தெரிவுகளூடன் இந்த ஒலித்தொகுப்பு ட்ராப்டில் போட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. இன்று தான் நேரம் கிடைத்தது. ஆக்கத்தை உருவாக்கியவர் எனது நண்பர் திரு. எஸ். நாகராஜன் பொள்ளாச்சி சில பாடல்களை தவிர அதிகம் கேட்ட்கப்படாத பாடலகளாக தந்துள்ளார். ஒலிக்தொகுப்பு வர்ணனை திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா. எஸ்.நாகாராஜன் அவர்களின் அபார முயற்சிக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
|
ஆக்கத்தை உருவாக்கியவர். பாடல்கள் பெயர் மற்றும் படத்தின் பெயர்.
எஸ். நாகராஜன்
5/197, சிவசக்தி இல்லம்
பொள்ளாச்சி
1. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல - செல்வம்
2. சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா - கந்தன் கருணை
3. முருகா என்றதும் உருகாதா மனம் - அதிசய திருடன்
4. மனம் கனிவாக அந்த கன்னியை - இது சத்தியம்
5. கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் - சரசாம்பிகையே
6. காதல் ஜோதி அணையாதது கண்கண்ட - ஊரும் உறவும்
7. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே - கர்ணன்
8. எங்கே நீயோ அங்கே - நெஞ்சிருக்கும் வரை
9. அங்கே மாலை மயக்கம் யாருக்காக - ஊட்டி வரை உறவு
10. யாருக்காக இது யாருக்காக - வசந்த மாளிகை
1 Comment:
சூப்பர். ;-)
Post a Comment