Thursday, December 4, 2008

814மனதை மயக்கும் மருக்கனங்காடு



//கட்டித் தங்கம் வெட்டி எடுத்து, ஆறெங்கும் தான் உறங்க, காண வந்த காட்சி என்ன, நடந்தால் வாழி காவேரி, அக்களூக்கு வளைக்காப்பு, நீரோடும் வைகையிலே, ஆத்தோரம் மணலெடுத்து, இயற்க்கை அன்னை தந்ததெல்லாம், தைபிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம். //

Get this widget | Track details | eSnips Social DNA


மேற்கண்ட வரிகள் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதுதானே? ஆமாங்க நமது திரை உலக ஜாம்பவான்கள் உருவாக்கிய படங்களில் இருந்து வெளியாகிய பாடல் வரிகள் தான். திரை உலக ஜாம்பவான்கள் அதிகபட்சம் கதை தயாரித்து அப்புறம் தான் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பாடல் வரிகள் எழுதி இசையமைத்து பாடலை காட்சியமைப்பிற்க்கேற்ப படமாக்குவார்கள்.

இதோ வானொலி நேயர்கள் ஏற்கெனவே வந்த பாடல்களூக்கு தகுந்தாற் போல் சிறுகதை தயாரித்து கதை நடுவே தேர்ந்தெடுத்த பாடல்களை நுழைத்து ஒலித்தொகுப்பாக வழங்கியுள்ளார்கள். இது போல் பல வந்துள்ளன. அதுபோல் இதுவும் ஓர் இனிமையான மனதை மயக்கும் மருக்கனங்காடு. கதையும் இசையுமாக உருவாக்கப்பட்ட ஒலித்தொகுப்பு. இந்த மருக்கனங்காடு ஏற்கெனவே ஒரு ஒலித்தொகுப்பு வந்திருப்பதால் ஒலிக்கோப்பில் மறுபடியும் பூக்கும் மருக்கனங்காடு என்று தலைப்பில் வந்திருக்கிறது. பழைய ஒலிக்கோப்பு என்னிடம் இல்லாததால் இந்த ஒலிக்கோப்பை மனதை மயக்கும் மருக்கனங்காடு என்ற தலைப்பில் பதிகின்றேன். பொதுவாகவே கதைபோல் எழுதுவது, திரையிசைப்பாடல்களூக்கு தன் ரசணைகளை எழுதுவது இதற்கெல்லாம் நிறைய யோசிக்க வேண்டும் அதிகம் புத்தகங்கள் படிக்க வேண்டும் இந்த இரண்டு பழக்கங்களூம் என்னிடம் இல்லாதது மிகப்பெரிய குறைதான். இருந்தாலும் எனக்கு கதை கேட்க பிடிக்கும், தேவையில்லாமல் கதை விடத்தான் எனக்கு தெரியாது. அதுவும் இனிமையான பாடல்களூடன் வரும் இதுபோல் கதை கேட்க மிகவும் ஆர்வம்.

இந்த ஒலிக்கோப்பை உருவாக்கியவர் மிக அனுபவம் மிக்கவர். புத்தகங்கள் அதிகம் படிப்பார் போலும் அவரின் ரசணையான ஆக்கம் அவரின் எழுத்துக்களில் நன்றாகவே தெரிகிறது. திரு.வீரநாயகம் அவர்களின் இந்த மனதை மயக்கும் மருக்கனங்காடு ஒலிக்கோப்பு நிச்சயம் கேட்பவர்களின் மனதை மயக்கும் என்பது உண்மை. அவரின் எழுத்துக்களை ஆழ்ந்து அனுபவித்து கதாபாத்திரங்களூக்கு உயிரோட்டம் தந்தவர்கள் நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் டிஜ்ஜிடல் குரலோன் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா மற்றும் சகோதரி தூரிகா இருவரின்
குரலுகளூம் கதைக்கு நன்றாக மெருகேற்றியிருக்கின்றன. ஆர்வமுடன் ஆக்கத்தை உருவாக்கிய திரு.விரநாயக்கம் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக என் பாராட்டுக்கள்.

ஆக்கத்தை வழங்கியவர்:
திரு.வீரநாயகம்
மகளிர் பாலிடெக்னிக் வளாகம்
கோவை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam