ஆண்: நான் உன்னை பார்க்கும் நேரம் நீ மண்ணைப் பார்ப்பதேனோஉன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோபெண்: நான் வெட்கம் சிந்தும் நேரம் நீ முத்தம் வைக்கக் கூடும்என் கண்கள் மூடிக் கொண்டால் பிழையோஆண்: நீ சின்ன சின்னப் புன்னகை சிந்தும் வேளைஉன் கன்னக் குழியில் நான் சிக்கிக் கொண்டேன்உந்தன் கைவிரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்இந்த பூமிப் பந்தையும் நான் தாண்டிச் சென்றேன்(நான் உன்னை பார்க்கும் நேரம்)ஆண்: தூரத்தில் சிணுங்கும் உன் கொலுசோசையை அடிக்கடி கேட்க தினம் ஆசைதூக்கத்தில் என்னை மறந்துன்பேர் உளறிடப் பிறந்திடும் புது பாஷைபெண்: இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் நிரம்பியதே உன் பிம்பம்நீயின்றி நகர்கின்ற நொடித் துளிகளைத்தான் மறக்கின்றதே என்னுள்ளம்ஆண்: இமைகளிலே மின்னும் நளினம்உடல்தன்னை துளைத்தே செய்யும் பயணம்பெண்: தனிமைகளை கொல்லும் நிமிடம்இதழ்களும் இருந்தே செய்யும் நடனம்இரவுகளோடு சிறகுகள் நீட்டிப் பறக்கின்றதே(நான் உன்னை பார்க்கும் நேரம்)ஆண்: உனக்கென எழுதிடும் காதல் கடிதங்களின் பிழைகளையும் ரசிக்கின்றாய்அணு அணுவாய் எந்தன் உயிரில் புகுந்து நீ ரகசியங்கள் ருசிக்கின்றாய்பெண்: விரல்களின் மேலுள்ள வீணை நகங்கள் கொண்டு என் மனதை மீட்டுகின்றாய்நமக்கென பிறந்திட்ட புதியதோர் உலகை முதல் முறை நீ காட்டுகின்றாய்ஆண்: விழிகளின் மேல் துள்ளும் உருவம்ஜாடைகள் காட்டிடும் செல்ல மிருகம்பெண்: நினைவினிலே உந்தன் உருவம்நிஜமென நினைத்தென்னை வெட்கம் தழுவும்ஆண்: மௌனங்கள் மீது சலனங்கள் வீசி சாய்க்கின்றதே(நான் உன்னை பார்க்கும் நேரம்)படம்: ரசிக்கும் சீமானேஇசை: விஜய் ஆன்டனி
Post a Comment
0 Comments:
Post a Comment