முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
(முத்துக்களோ கண்கள்)
படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன
(முத்துக்களே பெண்கள்)
கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
(முத்துக்களோ)
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
(முத்துக்களே)
படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
Sunday, December 7, 2008
822. முத்துக்களோ கண்கள்
பதிந்தவர் கப்பி | Kappi @ 10:06 PM
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
உனக்குப் பிடித்த சில பாடல்கள் கூறெனக் கேட்டால்; தவறாமல் நான் கூற விழையும் பாடலிது.
அருமையான இந்திய வாத்தியங்களின் சங்கமம்; TMS + சுசீலா இனிய குரல்..கவியரசர் வரியென
கேட்ட காலம் முதல் என்னை ஆட்கொண்ட பாடல்.
சமீபத்தில் MP3 யில் தேடிக் கிடைக்காமல்;என் நண்பர் மகன் நேற்றே இதை மாற்றித் தந்தார்.பல தடவை கேட்டதுடன்; நான் பிடித்த படங்களை DVD யாக மாற்றும் போது ஒரு தொகுப்புக்குச் சேர்த்துப் பதிவு செய்து வைத்துவிட்டேன்.
இது நல்லிசை ரசனையுள்ளோர் அனைவருக்கும் காலமெல்லாம் மனதில் ரீங்காரமிடும் என்பதில் ஐயமில்லை.
எனக்கு செல்வமகள் எனும் ஜெயசங்கர் நடித்த படத்தில் இடம் பெற்ற" குயிலாக நான் இருந்தென்ன? குரலாக நீவர வேண்டும்; பாட்டாக நான் இருந்தென்ன ? பொருளாக நீவர வேண்டும்" எனும் பாட்டை
MP3 யாக தரமுடியுமா???
கிடைப்பின்,என்johan.arunasalam@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
Post a Comment