Friday, December 12, 2008

835. ஒரு கூட்டு கிளியாக



ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண்பாடு
இரை தேடப் பறந்தாலும் திசை மாறித் திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள், விண்ணைத் தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

படம் : படிக்காதவன் (1985)
இசை : இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam