Monday, December 15, 2008

838. அக்கரைச்சீமை அழகினிலே .....

அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே( அக்கரை)
புதுமையிலே மயங்குகிறேன்(2)
- அக்கரைச்

பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

(அக்கரைச்சீமை அழகினிலே)
லலலா லலலா

சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்


மஞ்சள் மேனிப்பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும்
மொழிகேட்டு கிளி பேசும்

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர் (அக்கரைச்சீமை)
லாலாலாலாலல்லாலா


பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருணாச்சலம்
திரைப்பட: பிரியா




6 Comments:

ஆயில்யன் said...

//பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்//


நல்லா இருக்கு!

ஆயில்யன் said...

//சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர் (அக்கரைச்சீமை)
லாலாலாலாலல்லாலா ///

இது உண்மைதான்

யாராச்சும் ஸ்பான்சர் பண்ணுனா //லாலாலாலாலல்லாலா// பாடிக்கிட்டே ஓடிப்போயிடலாம் :)))

ஆயில்யன் said...

தலைவரு நடிச்ச படம்!

டக்கரான பாட்டு

எனக்கு ரொம்ப பிடிச்சது :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன்..:)

Rajashahul said...

indha pattai ketkum podhellam manam siragai virithy vaanil parakkum.thanks a lot.

Anonymous said...

//சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே //

தேனீக்களே இந்த படத்தின் அனைத்து பாடல்கள் கேட்கும் போதெல்லாம். அந்த இசையமப்பு, பதிவு ஆஹா அஹா..என் மனமும் துள்ளித் துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்.. தேன் கிண்ணத்தில் தினம் தோறும் திருநாளே. பதிவிற்க்கு வாழ்த்துக்கள்.

Last 25 songs posted in Thenkinnam