Wednesday, December 10, 2008

829.காக்கா காக்கா மை கொண்டா!

காக்கா காக்கா மை கொண்டா!
காடை குருவி மலர் கொண்டா!
பசுவே பசுவே பால் கொண்டா!
பச்சைக்கிளியே பழம் கொண்டா! ( காக்கா)

உத்தம ராஜா என் கண்ணு!
பத்தரை மாத்து பசும்பொன்னு!
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க!
உடனே எல்லாம் தந்திடுங்க!
ஆஆஆஆஆ
பசுவே பசுவே பால் கொண்டா!
பச்சைகிளியே பழம் கொண்டா !(காக்கா)

கல்லைக் கையால் தொடமாட்டான்
தொல்லை ஏதும் தரமாட்டான்
சொன்னால் செய்தால் உங்களுக்கே
நல்லது என்றும் செய்திடுவான் ( கல்லைக்)
பசுவே பசுவே......


சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
சமத்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துரவில் தூங்காமல்
சுருக்காய் ஓடி வந்திடுங்க

ஆஆஆஅ
பசுவே பசுவே ...
காக்கா காக்கா....


திரைப்படம் ; மகாதேவி
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசையமைத்தவர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலை இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

1 Comment:

Dr.V.K.Kanniappan said...

எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் ‘காக்கா காக்கா மை கொண்டா’ அருமையான, கேட்கத் திகட்டாத ஒரு பாடல்.

ஜமுனாராணி பாடும் ’காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலையும் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வ.க.கன்னியப்பன்

Last 25 songs posted in Thenkinnam