Wednesday, December 17, 2008

843.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே..

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே (உன்னை நினைக்கவே)
நீ கேட்கையில் சொல்லவே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே (உன்னை நினைக்கவே)

லல்லால்லா லால்லா
ஜேஜேஜே ஜேஜேஜே

நான் உன்னை மறந்த செய்தி
மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும்-உன் கண்கள்
கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன்
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதல் உற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம் (உன்னை நினைக்கவே)

என் சாலை எங்கும் எங்கும்
ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு தில்லை
காட்சி யாவும் புதைந்து போனது
என் நெஞ்சம்
உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
ஓ ஓஒ
உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே
என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல (உன்னை நினைக்கவே)

பாடியவர் : ரேஷ்மி
இசை: பரத்வாஜ்
திரைப்படம் : ஜேஜே
பாடல் : வைரமுத்து



5 Comments:

கார்க்கிபவா said...

இசை பரத்வாஜ். வித்யாசாகர் அல்ல‌

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கார்க்கி ... மாற்றிவிடுகிறேன்..

ஆயில்யன் said...

//லல்லால்லா லால்லா
ஜேஜேஜே ஜேஜேஜே///


அட!


பரீட்சார்த்த முயற்சிகள் ஆரம்பிச்சாச்சா:))

சூப்பர்!!!

பை தி பை இந்த லைன்ஸ் அந்த பாடறச்ச அப்படியே சும்மா ஒரு குதூகலமா இருக்கும் :)))))

ஆயில்யன் said...

//உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே ///


சிம்பிள்

ஆனா

கவி வரிகள் :)

G3 said...

One of my fav songs :)

Kalakkareenga muthukka :D

Last 25 songs posted in Thenkinnam