அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…
எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!
துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)
(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)
வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)
(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)
(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே!!
திரைப்படம் :வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரசன்னா
இசையமைத்தவர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் :தாமரை
Thursday, December 25, 2008
862. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:18 PM
வகை கார்த்திக், தாமரை, ப்ரசன்னா, ஹாரிஸ் ஜெயராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
எனக்கு பிடித்த பாட்டு...நன்றி கயலக்கா...!
/வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
//
வாழ்க்கையை உணர்த்தும் அருமையான வரிகள் !
:)
//தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே!! //
சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்! :))
அந்த பாட்டுல சமீராவும் சூர்யாவும் (0:43m)ஆடுற கெட்ட ஆட்டம் ரொம்ப பிடிக்கும்
வீடியோ இஙகே
வணக்கமுங்க....உங்க பாட்டுக்கு ஒரு எதிர்ப் பாட்டுங்க...இஃகிஃகி!
===============================
உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!
மாமன் கண்ணு இன்னும் துஞ்சலே;
நீ வந்து ராத்திரிபூரா குந்திகிட்டே கனவுலே!
உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!
மாமன் விசாழக்கெழமை வருவேன்கோவத்துல;
ஆனாநீ அடக்கிப்புடுவியே அன்புல!
அந்த மஞ்ச தாவணி இன்னும் மறக்கல;
அந்தநாள்போல மாமன கவனிச்சா என்ன அஞ்சலே?
உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன்அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!
ஒய்யாரக் கண்ணழகு சின்னவளே அஞ்சலே;
உனக்குஅடிமை நானு மனசுலே!
அன்னாபூர்ணா கௌரிசங்கர் இன்னும் திறக்ககல;
நீவொரு போண்டா டீயும் குடுத்தா தேவலே!
உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!
லட்டு முறுக்கு நல்லா இருக்கு ச்சின்னபுள்ளே;
கறியும் மீனும் செஞ்சு போட்டா என்ன அஞ்சலே?
அடி வாடி அக்கா பெத்த மவளே;
மாமன் நானு அடஞ்சு கிடக்குறேன் உம்மனுசுல!
உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!
நன்றி நிஜமா நல்லவன்.. எனக்கும் பிடிச்ச பாட்டு இது.. :)
ஆயில்யன் .. பாட்டை எழுதினது யாரு தாமரையாச்சே..
நல்ல பாட்டு போல இருக்கு,அதான் நட்டு எங்க இருந்தாலும் இந்த பாட்டு போட்டா ஓடிவந்து டிவி முன்னால நின்னுப்பான்!
அன்புடன்
அபிஅப்பா
நன்றி ஆளவந்தான் .. :)
பழமை பேசி நல்லாருக்கு உங்க எதிர்ப்பாட்டும்.... :)
அபி அப்பா நன்றி.. குட்டீஸுக்கு டண்டனக்கான்னா போதாதா ஆட்டம் தன்னாலே வருமே.. :)
தமிழ் படத்தின் பாடல் வரிகள்
பச்ச, மஞ்ச, கருப்பு தமிழன் நான் உங்கள ரட்சிக்க வந்த கடவுளும் நான்தான் என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல எல்லா தாய் குலத்திற்க்கும் நான்தான் செல்ல பிள்ள
2011 நம்ம கையில சந்திப்போம் தோழ நம்ம சட்ட சபையில என்ன கண்டா எவதனுக்கும் உள்ளுக்குள நடுங்கும் என் பருவ பட்டால் சிங்கமும் பதுங்கும்
பச்ச.....
பச்ச, யெல்லொ, பிங்க் தமிழன் நான் உங்கள ரட்சிக்க வந்த கடவுளும் நான்தான் என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல எல்லா தாய் குலத்திற்க்கும் நான்தான் செல்ல பிள்ள
இந்த பாடலை எழுதியவர் யாஸர் அரஃபாத் (கீழக்கரை)
நன்றி
அ.யாஸர் அரஃபாத்
Post a Comment