“அழையுங்கள் அந்த வெண்குரலோனை” -- அசரிரீயை நேசிக்கும் அபூர்வ ரசிகன்
அன்பு நண்பர்களே எனக்கு நீங்கள் தலைப்பே வித்தியாசமாக இருக்கே என்று யோசிப்பது எனக்கு புரிகின்றது. ஆமாம்.. ஆமாம் திரையிசை பாடல்களில் அசரிரீ ஒலியின் மூலம் பல பாடல்கள் வந்துள்ளன அவை பாடல்களூக்கு கதாபாத்திரத்தின் மனநிலையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டிவிடும். நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள் துவக்கத்தில் சொல்வது போல் பாடல்களில் அசரிரீ குரல் வேண்டுமா “அழையுங்கள் அந்த வெண்குரலோனை” என்று சீர்காழி கோவிந்தராஜனை தான் அழைப்பார்கள். ஏன் அவர் தான் அதிகம் பாடியிருப்பார். அந்த குரல் தான் அமர்க்களமாக அமைந்துருக்கும் மேலும் நமது மனதையும் கலங்கடிக்கும். இதோ இந்த ஒலிக்கோப்பில் அவர் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம் பெறுகின்றன. பாடல் மூச்சூடும் கேளூங்க நான் உத்திரவாரம் தருகிறேன். ஒலிக்கோப்பு முழுவதும் கேட்டவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் இல்லையில்லை அந்த நாள் முழுவதும் அந்த அசரிரீ குரல் ஒலிக்கும். உங்கள் மனதும்வாயும் முணுமுணுப்பது நிச்சயம்.
|
இந்த ஆக்கத்தை மிகவும் சிரமப்பட்டு பாடல்களையும் திரைப்பட வசணங்களையும் தேடிப்பிடித்து வழங்கிய எனது அன்பு நண்பர் திரு. ஜி.டி.ஜித்தார்த்தன் அவருக்கு நன்றி. அவரின் கடின உழைப்பு நன்றாக தெரிகிறது. தேன் கிண்ண நேயர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள்.
ஆக்கத்தை உருவாக்கியவர்:
திரு.ஜி.டி.ஜித்தார்த்தன்
சவுந்தர்ராலயம்
48/1. பாலாஜி நகர்
எஸ்.ஆர்.கே.வி.அஞ்சல்
பெரியநாக்கன்பாளையம்
கோவை
0 Comments:
Post a Comment