நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
Friday, December 5, 2008
817. நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
பதிந்தவர் கப்பி | Kappi @ 9:05 AM
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும் சோகம் சொன்னால் உன் பாரம் தீரும் பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று//
மனதை மயக்கும் இனிமையான வரிகள் பாலுஜியின் குரலில் கேட்க சொல்லவும் வேணுமா.. பதிவிற்க்கு நன்றி.
அருமையான பாடல் :-)
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்//
இந்த வரிதான் ஹைலைட்.
மிக்க நன்றி
நன்றி ரவி, புனிதா, புதுகைத் தென்றல்!
Post a Comment