Friday, December 12, 2008

833. சந்தனக் காற்றே




சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை

(சந்தனக் காற்றே)

நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்.. மறைய மறைய.. தெய்வீகம்.. தெரியத் தெரிய
வைபோகம் தான்...

(சந்தனக் காற்றே)

கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்... தழுவத் தழுவ... சூடேற்றும்... சரியத் சரிய
ஏகாந்தம் தான்...

(சந்தனக் காற்றே)

படம் : தனிக்காட்டு ராஜா(1982)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

1 Comment:

சாணக்கியன் said...

பாடல் வரிகளை கொடுத்துள்ளீர்கள். அதை எழுதிய கவிஞர்களுக்கு மரியாதை செய்யவேண்டாமா? அவர்களது பெயர்களையும் கண்டிப்பாகப் போடுங்கள்.

Last 25 songs posted in Thenkinnam