”வி ஆர் இன் லவ்” ஆமாங்க காதலர்கள் இருவர் அடிக்கடி சொல்லும் இந்த வாக்கியம் தான்.
காதலில் ஏற்பட்ட வெற்றியில் இன்பத்தில் புலம்பினாலோ, அதே காதலில் ஏறப்ட்ட தோல்வியின் விரக்தியில் புலம்பினாலோ. வி ஆர் இன் லவ் இருவருக்கும் கன கச்சிதமாக பொருந்தும் வார்த்தை அந்த தலைப்பிலேயே பாடல் ஒன்று கடைசியாக வருகிறது. மொழி மாற்றம் பாடலாக இருந்தாலும் கேட்க சோகத்திலும் சுகமாக இருக்கிறது. போதாதற்கு நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் டிஜ்ஜிட குரலோன் திரு. லக்ஷ்மி நாராயானா அவர்கள் காதலர்களுக்கு இடையே என்ன என்ன அவஸ்தைகள் தோன்றுகின்றது என்று புட்டு புட்டு வைக்கிறார். பாடல் தெரிவுகள் மீண்டும் மீண்டும் கேட்டாலும் ம்..ம்....ம்... ஒலித்தொகுப்பு கேட்பதற்க்கு இனிமையாகதான் இருக்கிறது. நீங்களும் கேளுங்கள்.
1. நாதஸ்வர ஓசையிலே
2. அந்த சிவகாமி-பட்டனத்தில் பூதம்-டி.எம்.எஸ்,பி.சுசீலா- கோவர்த்தனம்
3. அன்புள்ள மான் விழியே
4. தேவன் கோயிலில்
5. தூது செல்ல ஒரு தோழி-பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
6. மலரே மலரே- பி.சுசீலா, தேன் நிலவு
7. என் கேள்விகென்ன பதில்
8. ஊமை நெஞ்சில் சொந்தம் - கே.ஜே.யேசுதாஸ்
9. அவள் பறந்து போனாளே
10.- வி ஆர் இன் லவ்
3 Comments:
அருமையான காதற் பாடல்களின் தொகுப்பு. மனதுக்கு இனியது காதல். அந்த அளவிற்கு இனியவை இந்தப் பாடல்கள். பாடல்களும் லஷ்மி நாராயணாவின் தொகுப்பும் மிக அருமை. இந்தத் தொகுப்பைக் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி ரவி.
ஜி.ஆர் சார்
ஒலிக்கோப்பு கேட்டீங்களா? ஈஸ்னிப்ஸ் ப்ளேயர் சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் அதை மாத்திடறேன். நண்பர்களே சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.
அன்பர்களே, ஒலிக்கோப்பு மாற்றியமைத்துள்ளேன் கேட்டு விட்டு சொல்லுங்கள். எனக்கு ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் நான் பதியும் பாடல் வேலை செய்யும் இடத்தில் கேட்கமுடியாது. இதற்காக நான் வெளியில் செல்ல வேண்டும் மறுபடியும் கேட்டவர்கள் ஒலிக்கோப்பு வேலை செய்யுதா என்று தெரிவிக்கலாமே?
Post a Comment