கலவரப்டுத்தும் சொல்லிசை கானங்கள்
கானல் நீர் பற்றி எல்லோரும் தெரிந்திருப்பீர்கள். ஹைவேஸ் ரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் நம் கண் முன் நீரோடை போன்று தெரியும் சில நேரங்களில் ஏன் பல நேரங்களிலும் ரோட்டில் போகும் வாகனங்களின் பிம்பங்களூம் நமக்கு தெரியும் இதை நான் பலதடவை பார்த்து ரசித்திருக்கிறேன். அதுபோல கண்ணுக்கும் மட்டும் கானல் நீர் போல.
நம் காதுகளூக்கும் ஒரு கானல்சொல் ஒன்றை பாடல்களில் மறைத்து வைத்து அடிக்கடி நம் காதுகளூக்கு ரீங்காரமிட செய்துவிட்டு அலைபாயவைக்கிறார் நம் ஆதர்ஸ அறிவிபாளர் ஆர்.ஜி.எல்.என் சார். நாம் மட்டுமல்ல ஒலிக்கோப்பில் நீங்களூம் கேளூங்கள் அர்த்த
ராத்திரியிலும் நீங்கள் கணினியுடன் போரடுகிறீர்கள், வானொலி நேயர்களோ இந்த பாடல்களூடன் எப்படி போராடுகிறார்கள் என்று. சரி சரி அப்படி என்ன அந்த வார்த்தை என்று தானே கேட்கிறீகள்?. அது எப்படிங்க நான் மட்டும் சொல்ல முடியும்? கானங்களை கேளுங்கள் முடிவில் உங்களூக்கே தெரியும். நான் அந்த வார்த்தையை உபயோகித்தது சரி தான் என்று. என்ன தயாராகிவிட்டீர்களா அன்பர்களே. அமுக்கி விடுங்கள் ப்ளேயரின் ஐகானை. ஜாக்கிரதை அறிவிப்பாளர் பேச்சை கேட்டு டென்சன் ஆகாதீர்கள். வழக்கம் போல்
நம்மை குழப்ப மீண்டும் ஒரு சொல்லை கையில் எடுத்துக்கொண்டு. அமைதியாக க்ளாசிக் கானங்களில் கரைந்து போயிருந்த நமது நேயர்களை ”அர்த்தமுள்ள அர்த்தமற்ற பேச்சுகளால்” தலைமுடியை பிய்த்துக்கொள்ளூம் படி வைத்திருக்கிறார்.
ஆர்.ஜி.எல் சார் “அநியாயம் இது அநியாயம் சார்” இப்படியெல்லாம் வார்த்தைகளை கொடுக்கீறீர்களே அடுக்குமா உங்களூக்கு?. தேன் கிண்ண நேயர்களே ஒட்டு மொத்தமாக நேற்று (28.12.08) இந்த் ஒலிக்கோப்பை கேட்டு என் தலைமுடியை பிய்த்துக்கொண்டு
வெறுத்துப் போய் அவரிடம் கேட்கும் கேள்வி தான் மேலே சொன்னது. இந்த ஒலிக்கோப்பை கேட்டு முடிவில் நீங்களூம் கேட்கப்போகிறீர்கள் என்பது நிச்சயம். ஆஸ்திரேலியா கானாபிரபா சார் உங்க றேடியோஸ்பதியில் இது போல் கான்செப்ட் வைத்திருக்கிறீர்களா? (தேன் கிண்ணத்துல இதுபோல் 4 பதிவுகள் வந்துவிட்டது கேட்டிருப்பீர்கள் என்று
நினைக்கிறேன்) அர்ஜெண்டைனா ஜி.ராகவன் சார் நீங்களூம்? ஒலிக்கோப்பை கேட்டால் நீங்களூம் வெறுத்திடுவீர்கள். அவ்வளவு ஸ்வாரஸ்யம், பரவசம். அப்படியென்ன பரவசம் கேட்டு விடுவோமா அன்பர்களே?
|
1. மாலையிட்டான் ஒரு மன்னன் - அவன் ஒரு சரித்திரம்
2. திருமாலின் திருமார்பில் - திரிசூலம்
போட்டியில் சேராத பாடல் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
3.. பச்சை கிளி முத்து சரம் - உலகம் சுற்றும் வாலிபன்
4. ஹோ ஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
5. ரோஜா மலரே ராஜகுமாரி
6. ஒரே பாடல் உன்னை அழைக்கும்
7. நான் பாடும் பாடல்
2 Comments:
ரவி சார்
வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது, இந்த அறிவிப்பாளரின் குரல் நீண்ட நாட்களுக்கு பின் ஆல் இந்தியா ரேடியோ கேட்ட பாங்கில் இருப்பது வெகு சிறப்பு
பிரபா சார்,
யம்மாடி இப்பவாவது உங்களுக்கு ஒலிக்கோப்பு இறக்குமதி செய்து கேட்க நேரம் கிடைத்ததா?.
//இந்த அறிவிப்பாளரின் குரல் நீண்ட நாட்களுக்கு பின் ஆல் இந்தியா ரேடியோ கேட்ட பாங்கில் இருப்பது வெகு சிறப்பு//
சரியாப்போச்சு தேன் கிண்ணத்தில் என்னுடைய அதிக பதிவுகள் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள் வழங்கிய ஒலிக்கோப்புக்கள் அவரின் தெரிவுகளே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவரின் குரலுக்காகவே அவர் வழங்கியதை நான் தருகிறேன் அவ்வளவே என் பணி. மறு மொழிக்கு மிக்க நன்றி.
Post a Comment