Saturday, December 6, 2008

819. தென்றல் வந்து என்னைத் தொடும்




தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

(தென்றல் வந்து என்னைத் தொடும்)

தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது

(தென்றல் வந்து என்னைத் தொடும்)

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்

(தென்றல் வந்து என்னைத் தொடும்)


படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

1 Comment:

Anonymous said...

//மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும் சாரம் ஊறும் நேரம்//

ஆஹா ஆஹா.. இந்த வரிகள் தாஸண்ணா குரலில் உண்மையிலே
நெசம்மாவே இசழ் ரச்ம் ஊறுதப்பா..

Last 25 songs posted in Thenkinnam