Wednesday, December 24, 2008

858. எம்.ஜி.ஆர் - நாளை நமதே எந்த நாளும் நமதே




அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் :

1 Comment:

Anonymous said...

எம் ஜி ஆர் ரசிகர்கள் பார்க்கவேண்டிய படம்http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

Last 25 songs posted in Thenkinnam