தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல் நான் தானே சீர் ஆட்டினேன்
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
மலராக எண்ணி தான் நானும் வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட நானும் துடிச்சேன்
பாதில வந்த சொந்தம் பெரிசு என்று
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாசம் வச்ச என் நெஞ்சு புண் ஆகவே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே
கிளியாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் கொத்தி விட வலிபட்டு நானும் துடிச்சேன்
*****
படம் : தங்கைக்கோர் கீதம்
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : டி. ராஜேந்தர்
*****
Monday, December 1, 2008
809. தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
பதிந்தவர் நாகை சிவா @ 8:24 PM
வகை 1980's, T ராஜேந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment