Thursday, December 11, 2008

831. நல்லதோர் வீணை செய்தே

முண்டாசு கவிஞனின் பிறந்தநாளை முன்னிட்டு



நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


படம் : பாரதி (2000)
இசை : இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா, மனோ

1 Comment:

தமிழ்ச் செல்வன்ஜீ said...

கத்தி போல் மனசுக்குள் இறங்கும் ராகதேவனின் குரல் மகாகவியின் வரிகளை மேலும் பொலிவாக்குகிறது

Last 25 songs posted in Thenkinnam