உனக்காகத்தானே இந்த உயிருள்ளதுஉன் துயரம் சாய என் தோளுள்ளதுமுடியாமல் நீளும் நாள் என்றும் இல்லையாரென்ன சொன்னால் என்ன அன்பேஉன்னோடு நானும் வருவேன்ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால்நான் வாழ்வது அர்த்தம் ஆகும்மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்என் ஜென்மத்தின் சாபம் தீரும்(உனக்காகத்தானே இந்த உயிருள்ளது)வான் பார்த்த பூமி காய்ந்தாலுமேவரப்பென்றும் அழியாதடிதான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமேகண்ணாடி மறக்காதடிமழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவாஉன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பேமரணங்கள் வந்தாலும் வரம் அல்லவாஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால்நான் வாழ்வது அர்த்தம் ஆகும்மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்என் ஜென்மத்தின் சாபம் தீரும்(உனக்காகத்தானே இந்த உயிருள்ளது)நாமிருக்கும் இந்த நொடி முடிந்தாலுமேநினைவென்றும் முடியாதடிநாமெடுத்த நிழற்படம் அழிந்தாலுமேநிஜமென்றும் அழியாதடிநான் கேட்கும் அழகான சங்கீதங்கள்நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவாஎன் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவாநீயின்றி என் வாழ்க்கை பழுதல்லவாஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால்நான் வாழ்வது அர்த்தம் ஆகும்மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்என் ஜென்மத்தின் சாபம் தீரும்(உனக்காகத்தானே இந்த உயிருள்ளது)படம்: கற்றது தமிழ்பாடல்: நா.முத்துக்குமார்இசையமைத்துப் பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
கப்பி! அன்னிக்கு சொன்னியே அதே பொண்ணு தான்.... ரைட் ரைட் அனுபவி ராஜா அனுபவி..பாடல் மிக அருமையான பாடல் :)
Post a Comment
1 Comment:
கப்பி! அன்னிக்கு சொன்னியே அதே பொண்ணு தான்.... ரைட் ரைட் அனுபவி ராஜா அனுபவி..
பாடல் மிக அருமையான பாடல் :)
Post a Comment