உலகத்தின் தூக்கம் கலையாதோஉள்ளத்தின் ஏக்கம் தொலையாதோஉழைப்பர் வாழ்க்கை மலராதோஒரு நாள் பொழுதும் புலராதோதரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்கரை மேல் இருக்க வைத்தான்பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்தரை மேல் பிறக்க வைத்தான்கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளைஉறவை கொடுத்தவர் அங்கேஅலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர் இங்கேவெள்ளி நிலாவே விளக்காய் எரியும்கடல் வீடு தான் எங்கள் வீடுமுடிந்தால் முடியும்தொடர்ந்தால் தொடரும்இது தான் எங்கள் வாழ்வுஇது தான் எங்கள் வாழ்க்கைகடல் நீர் நடுவே பயணம் போனால்குடிநீர் தருபவர் யாரோதனியா வந்தோர் துணிவை தவிரதுணையாய் வருபவர் யாரோஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்ஒவ்வொரு நாளும் துயரம்அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரைஊரார் நினைப்பது சுலபம்படம் : படக்கோட்டி (1964)இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்திவரிகள் : வாலிபாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்
என்னா பாட்டு... பட்டையைக் கிளப்பிருச்சு!
வாலி ஐயா க்ரேட்
Post a Comment
2 Comments:
என்னா பாட்டு... பட்டையைக் கிளப்பிருச்சு!
வாலி ஐயா க்ரேட்
Post a Comment