Monday, March 24, 2008

338. கத்தாழ கண்ணால






கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட..தா....(2)

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை
கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு
கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ
தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக்காரிங்க

(கத்தாழ கண்ணால )


தழுதழுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவெனப் பற்கள் கண் கூசுதே
பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே
உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால )

படம்: அஞ்சாதே
இசை: சுந்தர் சி.பாபு
பாடல்: கபிலன்
பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam