Friday, March 21, 2008

333. இது ஒரு பொன்மாலை பொழுது



ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...

ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ... (இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்... (இது ஒரு)

ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...
ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்...

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

3 Comments:

வடுவூர் குமார் said...

என்னை “தன்னிலை” மறக்கவைக்கும் பாடல்களில் இதற்கு தான் முதலிடம்.

Thamiz Priyan said...

நல்ல பாடல். எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இது தான் அவரது முதல் பாடல் என்று நினைக்கிறேன்..

Unknown said...

எழில் - என் ringtone இதன், மனதை லேசாயாக்கும் பாடல்

Last 25 songs posted in Thenkinnam