Saturday, March 22, 2008

336. கஜிராஹோ கனவில் ஓர்



கஜிராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோ மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரவில் தினன தீம்தனா
துள்ளுகின்ற பொழுது இணைய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே
சிறையின் மொழிகளை பழகலாம்
(கஜிராஹோ..)

என் தேகம் முழுவதும் மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே
பூவின் உள் பனித்துளி தூறுது தூறுது தூறுதே
பனியோடு தேண்துளி ஊருது ஊருது ஊருதே
காமனின் வழிப்பாடு உடலினை கொண்டாடு
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி திறக்கலாம்
(கஜிராஹோ..)

தீராத உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா
தண்டோடு தாமரை மூழ்கிடும் கைகளை ஏந்தவா
மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதிலே மோகன ராட்டிணம் ஆடவா
பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு
எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது
(கஜிராஹோ..)

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

2 Comments:

M.Rishan Shareef said...

மை பிரண்ட்,எனக்கும் பிடித்த பாடலிது.முணுமுணுத்தபடி இருப்பேன்.
இதில் நீங்கள் தந்திருக்கும் சிலவரிகளைத் திருத்தி விடுங்கள்.


மெல்ல மெல்ல விரவில் தினன தீம்தனா
துள்ளுகின்ற பொழுது இனிய கீர்த்தனா

நான் உன்னுள்ளே உன்னுள்ளே
சிலையின் மொழிகளை பழகலாம்
(கஜிராஹோ..)


காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்
(கஜிராஹோ..)


தண்டோடு தாமரை பூவினைக் கைகளை ஏந்தவா


ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியலாம்
(கஜிராஹோ..)

நன்றி நண்பரே :)

sury siva said...

//அடுத்த ஜென்மத்துல கண்மணி அக்காவுக்கு நான் தம்பியா பிறக்கணும்னு வரம் கேப்பேன்!//

அப்படி நினைக்கிறதாலே நீங்க கண்டிப்பாக வரவேண்டும்.
நிசமாவே கடவுள் வந்துட்டார் போலத்தெரியுது.
அத்தனை பேரையும் அழைச்சுக்கிட்டு உடனே போங்க..
ஒரு பெரிய விழாவே நடக்குது.

இடம்:
http://arthamullavalaipathivugal.blogspot.com
நேரம்: ஞாயிறு
வருக..வருக.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

Last 25 songs posted in Thenkinnam