என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரதத்தில் விளையாடுதே
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
(என் அன்பே..)
விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இது தானோ காதல் என்றறிந்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்
அட கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுப்பக்கம் நீ காட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
(என் அன்பே..)
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்
விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு
Sunday, March 16, 2008
323. என் அன்பே என் அன்பே
பதிந்தவர் MyFriend @ 2:23 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment