உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
(உன்ன நெனச்சேன்..)
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
(உன்னை நெனச்சு..)
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)
கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)
படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: அர்சாத்
Tuesday, March 18, 2008
328. உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன
பதிந்தவர் MyFriend @ 5:53 AM
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment