மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
(மின்னல் ஒரு கோடி..)
குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினாய் நான் மழையாகினேன்
நீ வாடினாய் என் உயிர் தேடினேன்
நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே
மழையில் நனையும் பனி மலராய் போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
(மின்னல் ஒரு கோடி..)
படம்: வி.ஐ.பி
இசை: ரஞ்சித் பரோத்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
Saturday, March 29, 2008
347. மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
பதிந்தவர் MyFriend @ 8:22 AM
வகை 1990's, சித்ரா, ரஞ்சித் பரோத், ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment