நட்பே நட்பே இனி நட்பில் தித்தித்தோம்
நட்பே நட்பே இனி எங்கே சந்திப்போம்
அட வருஷம் மூன்று என்பது
ஒரு நிமிஷம் ஆகி போனது
விளையாட்டு விளையாட்டு விளையாட்டா
நாம் காலில் உதைத்த பந்துகள்
இன்று தொண்டை குழியில் உருளுது
இந்த உறவும் இந்த பிரிவும் இனி எங்கும் கிடைக்காதே
(நட்பே நட்பே..)
நல்ல புத்தகம் போல் நம்மை நாமே தினம் வாசித்தோம்
அந்த நூலகம் நடந்திடுமா?
நித்தம் அறுசுவை அரட்டையில் பசியாறினோம்
அந்த உணவகம் மறந்திடுமா?
கெட்ட பழக்கங்கள் பல கற்றுக்கொண்டோம்
நல்ல இதயத்தை நாம் சுமந்து சென்றோம்
பாடம் சொல்லியது கையளவு
இளமை சொல்லியது கடலளவு
இன்று அழகான கனவொன்று கலைகிறதே
(நட்பே நட்பே..)
அன்று யாரோ என்று வந்தோம் இங்கு முதல் நாளிலே
இன்று நட்பில் மனம் கை குலுக்குதே
தினம் சின்ன சின்ன சண்டை போட்ட காயம் எல்லாம்
இன்று சுகமாக வலிக்கின்றதே
எங்கு ஆண் எண்ணும் பெண் எண்ணும் பேதம்
அது ஏன் என்று நாம் கேட்டு சேர்ந்தோம்
எந்த திசைகளில் நடந்திடுவோம்?
எங்கே எவருடன் இணைந்திடுவோம்?
நாளை வரும் நாட்கள் இது போல இனிதாகுமா?
(நட்பே நட்பே..)
கடைசி பெஞ்சே பை பை
தூங்கும் சுவரே பை பை
கெமிஸ்ட்ரி லேப்வே பை பை
எஸ்.எம்.மஎஸ்ஸே பை பை
வாசிக்கும் புத்தகமே பை பை
கல்லூரி முதல்வனே பை பை
மாதுளம் பழங்களே பை பை
போய் வந்த சாலைகளே பை பை
படம்: விசில்
இசை: D இம்மான்
பாடியவர்கள்: TR சிலம்பரசன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
0 Comments:
Post a Comment