1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா; (காக்கை)
2.பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா; (காக்கை)
3. கேட்கு மொழியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதமிசைக்குதடா நந்தலாலா; (காக்கை)
4. தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா...நந்தலாலா... நந்தலாலா (காக்கை)
விரும்பி கேட்டவர் :சிவிஆர்
பாடலை எழுதியவர்: பாரதியார்
பாடலைப்பாடியவர் : KJஜேசுதாஸ்
இசை: L.வைத்யநாதன்
படம்:ஏழாவது மனிதன்
|
3 Comments:
ஜேசுதாஸின் குரலில் வெளிப்பட்ட ,பாரதியின் வரிகளுக்குள் அடங்கிய இசை!
கடைசியில் வரும் விசில் ஹம்மிங்கும்
சூப்பர் :)
வணக்கம் கயல்விழி முத்துலெட்சுமி
மிக அருமையான பாடல்
ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்தேன்
நன்றி
இராஜராஜன்
ரொம்ப நன்றி அக்கா!!
யேசுதாஸின் குரலில் நான் மிகவும் ரசித்துக்கேட்கும் பாடல்.
ரகுவரனின் மறைவு பற்றிய செய்தியை கேட்ட போது என் மனதில் உடனே தோன்றிய பாட்டு இது!
அதான் நேயர் விருப்பமாக கேட்டுவிட்டேன்.
மறைந்த நடிகர் ஆன்மா சாந்தியடையட்டும்!!
Post a Comment