எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது:
SPB/எஸ்.ஜானகி பாடியது:
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தோனுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்டப் பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்
(காலை நேரப் பூங்குயில்)
மேடை போடும் பெளர்ணமி
ஆடிப்பாடும் ஓர் நதி
வெள்ள ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்
( காலை நேரப் பூங்குயில்)
இளமை என்னும் மோகனம்
இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி
பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்
(காலை நேரப் பூங்குயில்)
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
Monday, March 31, 2008
351. காலை நேரப் பூங்குயில்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:11 AM
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment