Wednesday, March 5, 2008

312. சங்கீத ஜாதி முல்லை



நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..

ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..

படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: TBCD

1 Comment:

thadcha said...

nice one..........

Last 25 songs posted in Thenkinnam