Wednesday, March 19, 2008

330. கவிதை கேளுங்கள்



கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
(பூமி..)
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்
(கவிதை..)

நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே
காலம் நேரம் சேரவில்லை
காதல் ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
புரியுமா இவள் மனம்
இது விடுகதை...
(கவிதை..)

ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

பாறை மீது பவள மல்லிகை
பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து
துடி துடிக்குது மீனு
இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விழியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்

ஓம்...

ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam