Thursday, March 6, 2008

314. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது



http://youtube.com/watch?v=g8bLnX2ft4E&feature=related

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே..
(யாரது..)

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ..
மார்கழி பூக்கள் என்னை தீண்டும்
நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும்
தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்
(யாரது..)

தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ..
தாமரை ஓடை இன்ப வாடை
வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊருதே
ஆளானதால் வந்த தொல்லை
காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை
(யாரது..)

படம்: நெஞ்சமெல்லாம் நீயே
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்

விரும்பி கேட்டவர்: ஜெயராதாசிங்

2 Comments:

Anonymous said...

thanks my friend

Dr. S.A.V. Elanchezian PhD said...

மெல்லிசை மன்னரிடம் பணியாற்றிய சங்கர்கணேஷ் இருவரும் தம் குருவிற்கான நன்றிக்கடனாய் இப்பாடல் அவரின் பாணியிலேயே மலர்ந்த ஒன்று. எனினும், இந்தி திரைப்படப்பாடல் ஒன்றின் மெட்டில் இசையமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last 25 songs posted in Thenkinnam