Sunday, March 30, 2008

350. பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்


பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலால் உலகே இன்று மூழ்கத்தான் போகிறதே
(பாடவா..)

நெஞ்சுக்குள் மேகங்கள்
நெஞ்சுக்குள் மேகங்கள்
நகர்கின்ற நேரங்கள் விழியோரம் வருகின்றாய்
உயிரெல்லாம் நிறைகின்றாய்
பல ஜென்மம் பழகியதாய் உடல் எங்கும் ஒரு மின்னல்
ஒரு பூஞ்சோலை சூழ்ந்த தீவினில் மழையோடு
தினம் வாழ்கின்றதாக ஞாபகம் இழையோடும்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
(பாடவா..)

ஆகாயம் தீண்டவே
ஆகாயம் தீண்டவே
ஆவேசம் வந்ததே இளம் தென்றல் இசை கொடுக்க
இள மங்கை கை கொடுக்க
கனவெல்லாம் நிஜமாக கண் எதிரே தொலைந்தாளே
நிலவுக்கு மலர்களும் தூரம் ஓர் நேரம்
மலர்ந்திட கைகளை நீட்டும் ஆனாலும்
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
ஓ ப்ரேமா.. ஓ.. ப்ரேமா

படம்: வெற்றி
இசை: ஹர்ரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam