Wednesday, March 12, 2008

318. நான் தேடும் செவ்வந்தி பூவிது



நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

(நான் தேடும்)


பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராசாவே நாளாச்சு

(நான் தேடும்)

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

(நான் தேடும்)


படம் : தர்மபத்தினி
இசை : இளையராஜா
பாடியவர்: இளையராஜா, ஜானகி

2 Comments:

SP.VR. SUBBIAH said...

இளையராஜா பாடிய பாடல்களில் மிகவும் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று
வரிகளைப் பதிவிட்டமைக்கு ந்னறி நண்பரே!

இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான பாடல்... பழைய நினைவுகளை மீட்டுகிறது..

Last 25 songs posted in Thenkinnam