Monday, March 24, 2008

339.முன்பே வா என் அன்பே வா

பெண் :முன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்
(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
ஆண்:
தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ
பெண் : தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம் ( முன்பே வா)
(ரங்கோ ரங்கோலி)
விரும்பிக்கேட்டவர்: ரேணு சக்கரவர்த்தி
பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை : ஏஆர் ரகுமான்














Get this widget
Track details
eSnips Social DNA

5 Comments:

ஆயில்யன் said...

மனசுக்குள் மத்தாப்பு
பாடலை கேட்கையில்!

ஸ்ரேயா கோஷலின் தமிழ் தேன் ததும்பும் குரலில்....!

நிஜமா நல்லவன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரேயா கோஷல் குரலுக்காகவே பலதடவை கேட்டிருக்கிறேன். கேட்டுகொண்டிருக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன் மற்றூம் நிஜமா நல்லவன். கொஞ்சம் வரிகள் புரிவது கடினமான பாடல்..இணையத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதி வைத்திருக்கிறார்கள் இந்த பாடலை....

மங்களூர் சிவா said...

கலக்கலான சாங்

பிக்சரைசேஷனும் ரொம்ப நல்லா இருக்கும்.

Anonymous said...

"தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன்"
இந்த வரிகளும் இன்னும் சிலவும் சரியாக விளங்காமல் அவதிப்பட்டேன். இப்போது வாசித்துப் பயனடைந்தேன். நன்றி!

Last 25 songs posted in Thenkinnam