அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீர ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?
(அழகிய அசுரா..)
வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று
உன்னை அடைவேன்
(அழகிய அசுரா..)
கடல் நீலத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்ட காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும்
பெற்று வாழ்வான் என்று
(அழகிய அசுரா..)
கனாவொன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன்
நகம் பத்திலும் பூக்கள்
மாறி மாறியே பூக்க கண்டேன்
விழுகும் போதே வானில்
ஏறி நட்சத்திரத்தை கண்டேன்
நிகழும் யாது நன்றாய்
தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்
(அழகிய அசுரா..)
படம்: விசில்
இசை: D இமான்
பாடியவர்: அனிதா சந்திரசேகர்
Saturday, March 29, 2008
348. அழகிய அசுரா
பதிந்தவர் MyFriend @ 4:29 PM
வகை 2000's, D இமான், அனிதா சந்திரசேகர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment