Tuesday, March 4, 2008

306. மலரே தென்றல் பாடும் கானம் இது



மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
(மலரே..)

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ..
எவர் இதை மாற்றுவது
(மலரே..)

பூபாலம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்
நீ பேசும் பேச்சில் மணிவாசகம்
உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நாந்தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
உனைத் தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்
(மலரே..)

மாங்கல்யம் சூடும் மண நாள் வரும்
கல்யாண மாலை இரு தோள் வரும்
வாயார வாழ்த்த இந்த ஊர் வரும்
ஊர்கோலம் போக மணி தேர் வரும்
சொல்லியது போலே நம்
சொப்பணங்கள் கை கூடும்
வந்ததொரு வாழ்வென்றே
சிந்து கதிர் கண் பாடும்
வலைக்கரமும் துணைக்கரமும்
வரைந்திடும் தேன் காவியம்
(மலரே..)

படம்: வீட்டுல விசேஷங்க
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, S ஜானகி
வரிகள்: வாலி

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam