பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
காணாத கண்களை காணவந்தாள்...
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...(2)
மேலாடை தென்றலில் ஆகாகா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல் (பாடாத பாட்டெலாம்)
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து பேசம்மா.. (பாடாத பாட்டெலாம்)
|
பாடியவர் : PB.ஸ்ரீநிவாஸ்
படம் : வீரத்திருமகன்
இசை:விஸ்வநாதன் - ராமமூர்த்தி
3 Comments:
ஆஹா ரொம்ப நல்ல பாட்டு இந்த பாட்டு முடிந்ததும் இ.வி.சரோஜாம்மா ஆனந்தன் முன்னாடி வருவதும் அவர் அதிர்ந்து நிற்பதும் மிகவும் அருமையான காட்சி, நல்ல பாட்டு நினைவுபடுத்தியதற்கு நன்றி
இந்த பாட்டுலதானே அந்த கதாநாயகர் உட்கார்ந்துக்கிட்டே பாடுவாரு??
நல்லா இருக்கு :))))
//நல்ல பாட்டு நினைவுபடுத்தியதற்கு நன்றி//
ரிப்பீட்டேய்ய்ய்ய் !
நன்றி கிருத்திகா நன்றி ஆயில்யன்..
ஆமா சரோஜா அழகா ஆடுவாங்க..
கதாநாயகர் அதாங்க டிஸ்கோ சாந்தி அப்பா .. உக்காந்துக்கிட்டே ஸ்டைலா பாடுவார்.. ஆனந்தன் அவர் பேரு..
Post a Comment